Posts

Showing posts from March, 2016

அரிசியில் வண்டு விழாமல் இருக்க.........

டிப்ஸ் அரிசியில் வண்டு விழாமல் இருக்க......... பத்து மிளகாய் வற்றல்களை அரிசி சேகரிக்கப்பட்ட கலன்களில் வைக்க வண்டு விழாது

கற்பூரம் ஆவி ஆகாமல் இருக்க

டிப்ஸ் கற்பூரம் ஆவி ஆகாமல் இருக்க கற்பூரம் சேமிக்க பட்ட கலனில் சிறிது மிளகு போட்டு வைத்தால் போதும்

ஆய கலைகள் 64

தமிழர் பாரம்பரியம்: ஆய கலைகள் 64 ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக இணையத்தில் கிடைத்தது . அவை , 01. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 02. எழுத்தாற்றல் (லிகிதம்) 03. கணிதம் 04. மறைநூல் (வேதம்) 05. தொன்மம் (புராணம்) 06. இலக்கணம் (வியாகரணம்) 07. நயனூல் (நீதி சாத்திரம்) 08. கணியம் (சோதிட சாத்திரம்) 09. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு 18. அணிநூல் (அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம் 21. நடம் 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 23. யாழ் (வீணை) 24. குழல் 25. மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம் 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 30. யானையேற்றம் ...

அறுபத்தி மூன்று நாயன்மார்கள்

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் 1.அதிபத்தர் 2.அப்பூதியடிகள் 3.அமர்நீதியார் 4.அரிவட்டாயர் 5.ஆனாயர் 6.இசைஞானியர் 7.இடங்கழியார் 8.இயற்பகையார் 9.இளையான்குடிமாறன் 10.உருத்திரபசுபதியார் 11.எறிபத்தர் 12.ஏயர்கோன்கலிக்காமர் 13.ஏனாதிநாதர் 14.ஐயடிகள் காடவர்கோன் 15.கணநாதர் 16.கணம் புல்லர் 17.கண்ணப்பர் 18.கலிக்கம்பர் 19.கலியர் 20.கழறிற்றறிவார் 21.கழட்சிங்கர் 22.காரியார் 23.குங்கிலியக்கலயர் 24.காரைக்கால் 25.குலச்சிறையார் 26.கூற்றுவார் 27.கோச்செங்கட்சோழர் 28.போட்புலியார் 29.சடையனார் 30.சண்டேசுரர் 31.சந்தியார் 32.சாக்கியர் 33.சிறுப்புலியார் 34.சிறுத்தொண்டர் 35.சுந்தரர் 36.செருத்துணையார் 37.சோமாசிமாறர் 38.தண்டியடிகள் 39.திருக்குறிப்புத்தொண்டர் 40.திருஞானசம்பந்தர் 41.திருநாவுக்கரசர் 42.திருநாளைபோவார் 43.திருநீலகண்டர் 44.திருநீலகண்டயாழ்பாணர் 45.திருநீலநக்கர் 46.திருமூலர் 47.நமிநந்தியடிகள் 48.நரசிங்கமுனையாரையர் 49.நின்றசீர்நெடுமாறர் 50.நேசர் 51.புகழ்ச்சோழர் 52.புகழ்த்துனையார் 53.பூசலார் 54.பெருமிழவககுரும்பர் 55.மங்கயற்கரசியார் 56.மானக்கஞ்சாறர் 57.முருகர் 58.முனையடவார் 59.மூர்க்கர் 60.மூர்த்தியார் 610.மெய...

சாமுத்ரிகா சாத்திரம்

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறுவது இந்த சாத்திரம் அடிப்படை தான் எப்படிப்பட்டவன்; தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுக்கு விடை அறிய எண்ணும் மனித வேட்கையின் விளைவுகளாக எழுந்த சந்தைச் சாத்திரங்கள் பல. அவற்றில் சிலவற்றிற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களும் வானவியல் அறிவின் அடிப்படைகளும் இருந்தன. கைரேகை சாத்திரம், ஜாதகம், எண் சோதிடம், கௌளி சாத்திரம், மச்ச சாத்திரம், அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை அவற்றில் சில. இந்த வகை சாத்திரங்களில் ஒன்று தான் சாமுத்ரிகா சாத்திரம். மேற்கத்திய வகை அறிவியல் வளர்ச்சிக்கு, எந்தக் கண்டுபிடிப்பையும் புத்தகபூர்வமாக்கிப் பரவலாக்கும் பாணி அடிப்படை. ஆனால் கீழை நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிஞர்கள் தாம் ஆய்ந்து அறிந்தவற்றைப் பொதுவாக்காமல் தம்முடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு மட்டுமே சொல்லித் தந்து மறையும் வழக்கம் இருந்தது. அதனாலேயே காலப்போக்கில் அடிப்படையும் ஆழமும் தனித் தன்மையும் இழந்து மறைந்துப...

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.   மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

தமிழ் கணக்கு

தமிழ் கணக்கு ஒரு பாட்டி ஒரு கூடையில் சில முட்டைகள் கொண்டு வாந்தார் அப்போது எதிரில் வந்த செல்வந்தரின் வண்டியில் மோதி விட்டார் அவர் பாட்டியிடம் முட்டையின் விலை தருவதாய் கூறினார் முட்டை எவளவு இருந்து பாட்டி பாட்டி கூற்று 2முட்டை வீதம் 1மீதி 3முட்டை வீதம் 1மிதி   4முட்டை வீதம் 1மிதி 5முட்டை வீதம் 1மிதி 6முட்டை வீதம 1மிதி 7முட்டை வீதம் மீதி வராது என்றார் அப்படின முட்டை எத்தனை ???

தமிழ் கணக்கு

தமிழ் கணக்கு ஒருவர் ரூ.2.55 வைத்துள்ளார் மெத்தம் 7சில்லரை துட்டுகள் அதில் 1ரூ சில்லரை இல்லை மேலும்2, 0.50, 0.25 0.20 ஆகியவற்றிகும் சில்லறை இல்லை இருக்கும் சில்லறை என்ன என்ன!

பழந்தமிழ் கணக்கு

முன்று அடுத்த பிள்ளையார் கோவில் ஓவ்வொரு கோவில் முன் ஓவ்வொரு குளம் உள்ளது முன்று கோவிலுக்கும் செல்ல குளத்தில் குளித்த பின் செல்ல இயலும் மாலை உடன் குளத்தில் நீராடினால் மாலை இரட்டிக்கும் எனவே முன்று பிள்ளையாருக்கும் எப்படி சமமான மாலை போட இயலும்????

கண்நோய் காரணிகளும், மருந்தும்

கண்நோய் காரணிகளும், மருந்தும் ----------------------------- "பாரே பொடிக்கடல் பருவ வெயில் மேற்படல் வாறே கொங்கையாள் மாயை மிகச்செயல் சாயே முளுக்கறல் கண்ணால் அனல்பார்த்தால் சீரேறு பாஷாணம் தின்றதால் கண்நோய்" - திருமூலர் வைத்திய சாரம் 600 - கடுமையான வெய்யில் உடம்பில் படும் படியாக இருப்பவர்களுக்கும், பெண் மோகம் அதிகமாக கொண்டவர்களுக்கும், மிக அதிக வெளிச்சத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும், மிக வெப்பமான பொருள்களை உற்று பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்யாத பாசாண வகைகளை உண்பவர்களுக்கும் கண்நோய் வரும் என்று சொல்லும் திரு மூலர் மேலும், "கண்நோய் வரும் காரணம் இன்னும் கேள் புண்ணான மேகத்தால் பருவேட்டை வாயுவால் தன்னாம் மலக்கட்டால் தன்சலக் கட்டினால் புண்ணாம் இரணத்தில் போடும் காரத்தாலே" - திருமூலர் வைத்திய சாரம் 600 - கண் நோய் வருவதற்கான காரணங்களையும் சொல்கிறார். மேகத்தாலும், வாயுவாலும், மலச்சிக்கல் வருவதாலும், சிறு நீரை அளவுக்கதிகமாக அடக்குவதாலும், புண்ணான காயங்களுக்கு போடும் கார மருந்துகளாலும் கண் நோய் வரும் என்று சொல்வதோடு, "காரச்சுருக்கால் கடும் ராசா தூமத்தால் நேர...

சாஸ்திரங்கள்‬

நம் தமிழர்கள்   ‪#‎ சாஸ்திரங்கள்‬   என்று உருவாக்கி தமிழையும் தமிழர்களையும் காத்தனர் எ.டு தங்கம் லெக்குமி எனவும் அதை இடுப்பின் கீழ் அணிய கூடாது என்பார்கள் தற்போதைய விஞ்ஞானம் இதை ஒத்து கொண்டு காரணம் விளக்குகிறது. தங்கத்தின் தன்மை பாதம் முதல் உடல் முழுவதும் குளிச்சியுடன் உடலில் வாதம் மற்றும் பக்க வாதங்களை எற்படுத்தும்

அகிலத்திரட்டு‬ ‪அம்மானை‬ காப்பு‬

Image
‎ அகிலத்திரட்டு‬   ‪ அம்மானை‬   காப்பு‬ ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில் பாண்டவர்தமக்காய் தோன்றி பகைதனைமுடித்துமாயோன் வீன்றியகலியன்வந்த விசனத்தால் கயிலையேகிச் சான்றவர் தமக்கயிந்த தரணியில் வந்தஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை யெழுதலுற்றேன் சிவமேசிவமேசிவமணியே தெய்வமுதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவசங்கராத்தமியே யெங்களுடபவமேபவமே பலநாளுஞ்செய்த பவமறுத்துன்னகமேவைத் தெங்களையாட்கொள்வாய் சிவசிவசிவசிவ அரகரா அரகரா அலையிலேதுயிலாதிவராகவா ஆயிரத்தெட்டாண்டினிலோர்பிள்ளை சிலையிலே பொன்மகர வயிற்றினுள்செல்லப்பெற்று திருச்சம்பதி தனில் முலையிலேபொன்மகரப்பாலை உமிழ்ந்துபின் னுற்றதெட்சணம் மேதிலிருந்துதான் உலகில்சோதனைபார்த்தவர் வையிந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே திருமொழிசீதையாள்க்கு சிவதலம் புகழவெங்குமொருபிள்ளை உருவாய்த்தோன்றி யிகபரசோதனைகள்பார்த்து திருமுடிசூடி தர்மச்சீமையில் செங்கோலேந்தி ஒருமொழியதர்க்குள்ளாண்ட உவமையையுரைக்கலுற்றார்.

ஸ்ரீ கந்த குரு கவசம்

ராகம்: நாட்டை கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷ¢த்திடுவீரே ராகம்: நாட்டை ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுகா சரணம் குருபரா சரணம் சரண மடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருளின்பன் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய் ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் ராக...