தன்னிலை அறிதல்
பொன்வெள்ளி செய்கிறவன் பெரியோனல்ல,
புகழான அஷ்ட்டசிச்தி பெரியோனல்ல,
முன்னின்ற வயித்தியனும் பெரியோனல்ல,
மூச்சடக்கி யெழும்பினவன் பெரியோனல்ல,
சின்னமுள்ள குழியிருப்போன் பெரியோனல்ல,
திறமுள்ள கெவனமிட்டோன் பெரியோனல்ல,
தன்னிலையை அறிந்தவனே பெரியோனய்யா,
தனையறியான் வகைகெட்ட சண்டிமாடே.
_சுப்பிரமணியர் சுத்த ஞானம் 100.
Comments
Post a Comment