குலசை முத்தாரம்மன் வழிபாடு தொடங்கிய கதை

முத்தாம்மனுக்கு விரதமிருந்து வேஷம் போடுவது ஏன்?
அப்பகுதியை சுற்றியுள்ள பதினாறு கிராமத்திலும் நிலங்கள் கொண்ட பண்ணையார், இதை கேள்விப்பட்டு வந்தார். வெள்ளாமை குறைச்சலாக இருக்கு, உன் சாமிக்கு சக்தியிருந்தா அதை பெருக்கி தர வை, நீ கேட்கிறத நான் செய்யுறேன் என்று அவர் கூற, பூசாரி, திருநீறு கொடுத்து, பண்ணயார் ஐயா, இந்த முறை வெள்ளாண்மை சிறந்து விளங்கும், ஆத்தா, முத்தாரம்மனுக்கு கோயில் கட்ட உதவி செய்யுங்க, என்றார். பண்ணையாரும் சரி என்றார். வெள்ளாமை சிறந்தது. பண்ணையார் மனம் குளிர்ந்தது. கோயில் கட்ட உதவினார்.
கோயில் கட்டப்பட்டது. ஒரு நாள் பூஜை நடந்து கொண்டிருந்த நேரம் குறத்தி பெண் ஒருவர் கோயில் வாசலுக்கு முன்பு வந்து நின்றாள். பண்ணையார் தனது மீசையை முறுக்கிய படி, நான் கோயிலுக்கு வரும்போது கண்ட நபர்களை எல்லாம் அனுமதிக்கக் கூடாது என்று பூசாரியிடம் வற்புறுத்த, ஐயா, அம்மாவ பார்க்க வருகிறவர்கள தடுக்க, எனக்கு அதிகாரம் இல்லை என்றார்.
என்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று சினம் கொண்டு சென்று விட்டார். மறுநாள் காலையில் பண்ணையாரின் கன்னம் வீங்கியது. வலியால் துடித்தார். உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தார். முத்தாரம்மனை வேண்டினார். அன்றிரவு அவரது கனவில் அம்மன் தோன்றி, தந்நிலை தாழ்த்தி, கோலத்தை மாற்றி இன்றிலிருந்து எட்டாவது நாள் என் சந்நதிக்கு வா, உன் பிணியை தீர்க்கிறேன் என்றாள்.
அதன்படி, அந்த பண்ணயார், தனது கோலத்தை ஊசி மணி பாசிகள் விற்கும் குறவர் போல தனது உருவத்தை மாற்றி, எட்டு நாள் உணவு உண்ண வாய் திறக்க முடியாமல் அவதி பட்டவர், நடக்க முடியாமல் நடந்து அன்னையின் சந்நதி வர, கோயில் சிலையில் அம்மன் சிரித்தபடி காட்சி கொடுத்தார். அவருக்கு மட்டுமே தெரிந்ததால் சந்நதியிலேயே அம்மா, அம்மா என்று தன்னையறியாமல் கத்தினார். அப்போது குரங்கு ஒன்று வந்து, அவரது கையில் வாழைப்பழத்தை போட, அதை உண்ட அவர் மறுகனமே உடல்நிலை தேறினார். தவறை உணர்ந்து அம்மனிடம் மன்னிப்பு கேட்டார். அன்னையின் திருவிளையாடல் எல்லா இடமும் தெரியவர, நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமானது.
பண்ணையார் வேஷம் போட்டு வந்ததால் அன்னை தரிசனம் கொடுத்து அருள்புரிந்தார். என்பதற்காக பலரும் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேஷம் கட்டி வந்தனர். அதன் பின்னரே பக்தர்கள் வேஷம் கட்டும் நிகழ்வு தொடங்கியது.
தன்நிலை தாழ்த்தி வேஷமிட்டு வரும் அடியவர்களுக்கு அவர்கள் வாழ்வின் நிலையை உயர்த்தி வைக்கிறாள் அன்னை முத்தாரம்மன். பண்ணையார் வழி வந்த சேது என்பவரும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தசரா விழாவை இவ்வாலயத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இப்பகுதியிலுள்ளவர்கள் வெளியூர்களில் குடியேற, அங்கும் அம்மனுக்கு ஆலயங்கள் இங்கிருந்து பிடிமண் கொண்டு உருவாகியுள்ளது. இவ்வாலயத்தை நிறுவியவர் இங்கே ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
முத்தாரம்மன் கோவிலில் உள்ள விக்ரகங்களை கடந்த 1934ம் வருடம் அய்யாத்துரை கவிராயர் பீடம் அமைத்து அனுஷ நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அய்யாத்துரை கவிராயரின் ஜீவசமாதி அருகே அவரது சகோதரர்கள் பால், முத்தையன் ஆகிய இருவரின் ஜீவசமாதிகளும் உள்ளன.
அய்யாத்துரை கவிராயர் ஜீவசமாதி அடைவதற்கு முன் தனது உறவினர் கந்தன் என்பவரிடம் பூஜைகள் செய்வதற்கான பணியை ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. கோயிலில் மூலவராக ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இக்கோயிலில் நவராத்திரியையொட்டி நடைபெறும் தசரா விழா, முக்கிய விழாவாகும். தசரா என்றால் பத்தாவது இரவு என்று பொருள். விழா தொடங்கி பத்தாவது நாள் இரவு அசுரனை, அன்னை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அம்மனை வேண்டி வேஷம் கட்ட நினைப்பவர்கள் முதலில் 3 ஆண்டுகள் தொடர்ந்து தசரா விழாவிற்கு வந்து அம்மனை தரிசிக்க வேண்டும். பின்னர் அம்மன் சந்நதியில் பூ கட்டி வைத்து பார்ப்பார்கள், அதில் சிகப்பு பூ விழுந்தால் அம்மன் உத்தரவு கொடுத்ததாக கருதி வேஷம் கட்டுவார்கள். அதுவும் பூசாரி சொல்லும் வேஷத்தையே கட்ட வேண்டும். காளி, சுடலைமாடன், ஆஞ்சநேயர் வேஷம் கட்டும் நபர்கள், காப்புகட்டி 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். மற்ற வேஷம் கட்டுபவர்கள் 10 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். காளி வேஷம் கட்ட 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால் சிவன் உருவமாக இருப்பது, அது மட்டுமன்றி சிவனும், சக்தியின் சொரூபமான முத்தாரம்மனும் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். ஒரே நேரத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பூஜை நடக்கிறது. கோயிலின் தல விருட்சமாக வேம்பு உள்ளது.
இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 16 கி.மீ தூரத்தில் உள்ளது....

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்