சித்தர்கள் பகுதியில் வெள்ளையப்ப சித்தர்
*🌹🌺ஸ்ரீ வெள்ளையப்ப சித்தர் - நீப்பத்துறை....🌹🌺*
திருஅண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ளது நீப்பத்துறை கிராமம் நவாப் ஆட்சி காலத்தில் ஸ்ரீ வெள்ளையப்ப சித்தர் வாழ்ந்து வந்தார்.. மிகச்சிறந்த வைத்தியராக விளங்கினார் கிராம மக்களின் குறைகளை தீர்த்துவந்தார்...
செங்கம் செல்லும் தார் சாலைக்கு கிழக்காக ஒரு பெரிய குன்றில் தன் ஞானத்தால் வேத மந்திரத்தை ஒரு கல்லில் செதுக்கி அரை அடி ஆழத்தில் ஒரு குழி ஏற்படுபம் படி செய்து இறங்கு முகமாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி அதை பாம்பு கடித்தவர்க்கு சாப்பிட கொடுக்க விஷம் இறங்கும்.. இன்று இந்த நடைமுறையில் பலருக்கு மருந்து கொடுக்கப்படுகிறது..
மஞ்சவாடி கிராமத்தில் இருந்து வந்த ஒரு வியாபாரி கொண்டுவந்த மிளகு மூட்டை கணம் அதிகமாக இருக்க அந்த மூட்டை பிரித்து பார்க்க அதில் நாராயணன், ராதா, ருக்மணி சிலைகள் உள்ளது தெரியவர அதை சித்தரிடம் கொடுக்க சித்தர் அந்த சிலைக்கு பூஜை செய்து மீண்டும் அதை அவரிடம் கொடுத்து வீட்டில் வைத்து பூஜிக்க சொன்னாராம்.. தான் சமாதி ஆன பிறகு அந்த சிலைகளை தன் சமாதி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறி அவரை அனுப்பினார்.. என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்..
பல அற்பு்தங்களை நிகழ்த்திய சித்தர் பெருமான் தென்பெண்ணை ஆற்றில் கரையோரம் ஜீவசமாதி ஆனார்.. மேலும் (ஸ்ரீ ராமர் ஆறு) இரண்டு சமாதிகள் அருகே உள்ளன..
தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையிலிருந்து 12 km தூரத்தி்லும்.. திருஅண்ணாமலையிலிருந்து 60 km தூரத்தி்லும் உள்ளது..
Comments
Post a Comment