சித்தர்கள் பகுதியில் ஆண்டாள்புரம் சுவாமிகள்

*

*🌹🌺ஆண்டாள்புரம்  சுவாமிகள் - புதூர்....🌹🌺*

ஆண்டாள்புரம் சுவாமிகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணக்குடியில் பிறந்தவர்கள்.பல்லாண்டுகள் அடர்ந்த காடுகளில் தவம் இருந்து இறுதியில் திருப்பூண்டி அருகில் உள்ள சிந்தாமணியில் உள்ள ஒரு திடலில் தங்கி வாழ்ந்து வந்தார்கள்.வயதில் மிகவும் முதிந்தவரான இவர்களது சரியான வயதை இவ்விடத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பல முதியோர்களாளும் கூற இயலவில்லை.ஏறக்குறைய 100 லிருந்து 130வயதுடையவர் என்று சுவாமிகள் கூறும் வரலாற்று நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது.

ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்த அந்த மகான் ஓர் ஆழ்ந்த இராம பக்தரும் கூட.தன்னுடன் ஒரு ஆஞ்சனேயர் சிலையை எப்போதும் வைத்திருப்பார்கள். சில மெழுகுவர்த்திகள், தீப்பெட்டி ஒன்றும் வைத்திருப்பார்கள்.கால் நடையாகவே பல இடங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். வழியில் இருக்கும் தர்காக்கள், சிவன்,வைணவ ஆலயங்கள் கிருஸ்துவ ஆலயங்கள் இவற்றிற்கு விஜயம் செய்து சிலமணி நேரம் அவ்விடத்தில் தங்கி பின்பு தன் நடை பயணத்தை தொடர்வார்கள்.

இந்த மகானின் இச்செயல் எம்மதமும் இறைவனை நோக்கி அழைத்துச்செல்லும் பாதைதான் என்றும் இவற்றில் ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்றும் உணர்த்துவதாகவே இருந்தது. நீர் நிலைகளை கண்டபோதெல்லாம் அவ்விடத்தில் அமர்ந்து பூஜை செய்தார்கள்.இவ்விதமாக செய்து ஆலயங்களின் சக்தியையும் நீர் நிலைகளின் தன்மையையும் மெருகேற்றி புதுப்பித்தார்கள். வேளாங்கண்ணி மாரியம்மன் கோவில்,மாதா கோவில்,நாகை சௌந்தர்ராஜ பெருமாள் கோவில்,நாகூர் தர்கா,திருமலை -ராயன்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் பல சிவன் கோவில்களை தன் கால்நடை விஜயத்தில் வழிபட்டு சென்றார்கள்.இந்த மகானின் காலடி பட்டு புத்துயிர் பெற்ற ஆலயங்கள் பல.
           
பூஜை செய்ய வேண்டும் என்று தோன்றும்போது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வழிபாட்டை துவங்கிவிடுவார்கள்.வழிபாடு முடிந்த பின்னர் மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு ஆஞ்சனேயர் மற்றும் மெழுகுவர்த்தியை தன் மடியில் கட்டிக்கொண்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.அண்ணன்சாமி  அவர்கள் பிடாரி அம்மனை வழிபட சென்ற ஒரு நாளில் ஆண்டள்புரம் சுவாமிகளும் அண்ணனும் சந்தித்து கொண்டனர். குரு சிஷ்ய உறவைத்தாண்டி ஒரு ஆத்மார்த்தமான இணைவை இருவரும் தங்களுக்குள் உணர்ந்தனர். அண்ணன் அவர்கள் சுவாமிகளை மிகப்பெரிய மகான் என்பதை அறிந்து வைத்திருந்ததோடு அதை தன் சீடர்களுக்கும் சொல்லினார்கள் அண்ணனின் சீடர்கள் அனைவரும்  சுவாமிகளிடம் அளவு கடந்த பக்தியும் அன்பும் வைத்தனர்.
              
அண்ணனை நாடி வரும் பக்தர்களின் சில சூட்சும பிரச்சினைகளை அண்ணன் அவர்கள் ஆண்டாள்புரம் சுவாமிகளிடம் Refer செய்வதும் உண்டு.அண்ணனே சில பக்தர்களை அழைத்துக்கொண்டு சுவாமிகளை பார்க்க  ஆரம்ப நாட்களில் சிந்தாமணி திடலுக்கு சென்றதும் உண்டு.
                
குரு சிஷ்ய உறவில் அண்ணனும் சுவாமிகளும் சாதாரண மக்களைப் போன்று ஒருவரை ஒருவர் சந்திக்கையில் பேசிக்கொண்டதில்லை. அவர்களின் உரையாடல் ஆழ் மனதளவிலேயே மௌனமாக நடந்தது. ஆனால் இந்த இருவரும் பேசாமலேயே ஒருவரை ஒருவர் மிகச்சரியாக புரிந்து வைத்துக் கொண்டிருந்ததும் எல்லா சம்பாஷனைகளும் ஆத்ம அளவிலேயே அதிசயமாய் நடந்தேரியதும் அண்ணனின் சிஷ்யர்களுக்கு முன்னே நடந்த ஒரு அதிசயம்.இதே போன்று வரலாற்றில் ஞானிகளுக்கு இடையே பல சம்பாஷனைகள் நடந்திருக்கின்றன.சனகர், சனாநந்தர் போன்ற நால்வர் குரு தெஷ்ணாமூர்த்தி - யின் காலடியில் அமர்ந்தபோதும், டாக்டர்.பால் ப்ரன்டன் ரமண மஹரிஷியை சந்தித்த போதும்,ஞானானுபவம் மௌனத்தின் மூலமாகவே தரப்பட்டது.அண்ணன் அவர்கள் ஆண்டாள்புரம் சுவாமிகளின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர்.
    
ஆனால் சுவாமிகள் அண்ணனிடம் அளவு கடந்த அன்பும்,பக்தியும் வைத்திருந்தார்கள் என்பதுதான் வியப்பான விஷயம்.புதூருக்கு சுவாமிகள் வரும் போது அண்ணன் வசிக்கும் அறையின் நிலைவாசலை சுவாமிகள் தொட்டு வணங்கியதும் ஒரு சூட்சும இரகசியம்.
    
சுவாமிகளே அண்ணனை காளி என்றும் வர்ணித்ததை சீடர்கள் கேட்டிருக்கின்றனர்.அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் சுவாமிகள் விபூதி தருவதும், சுவாமிகளுக்கு உடல்நிலை சரியில்லை- யென்றால் அண்ணன் விபூதி தருவதும் வழக்கமாக இருந்தது.ஒரு காலத்தில் சுவாமிகள் அண்ணனை சந்திக்க வரும்போது தங்குவதற்கு வசதியாக அண்ணனின் அறைக்கு அருகிலேயே ஒரு குடிசை அமைக்கப்பட்டது.பிடாரி அம்மன் கோயிலில் ஆரம்பமான இந்த ஆத்மார்த்த தொடர்பு அண்ணனின் சமாதிக்கு பிறகும் தொடர்ந்தது.சுவாமிகள் கால் நடையாக புதூர் வந்து அண்ணனின் ஜீவசமாதியில் அமர்ந்து சென்றதும், பின்பு கோமலில் அண்ணனுக்காக எழுப்பப்பட்டுகொண்டிருந்த அண்ணன் திருக்கோயிலை பார்வையிட்டதும்.தனது சமாதிக்கு சில வாரங்கள் முன்பிருந்தே *கோமலின்* (அருணாலயம்)அண்ணன் வளாகத்தில் தங்கியதும்,அண்ணன் ஜீவ சமாதி அடைந்த ஏழு மாதங்களிலேயே தன் கடமை முடிந்தது போல் தன்னை 20.09.1989 அன்று பரமாத்மாவுடன் இணைத்துக்கொண்டதும் இறைவன் நிகழ்த்திய ஓர் அற்புதம்.

மெத்த ஆங்கில அறிவும்,உயர்ந்த பரமாத்ம ஞானமும்,உயரிய சித்திகள் பல பெற்ற சித்தராகவும் வாழ்ந்த ஆண்டள்புரம் சுவாமிகளை திரிலோக சஞ்சாரி என்றும் குரு மார்க்க ஞானி என்றும் வர்ணிக்கின்றார் அண்ணனின் மற்றும் சுவாமியின் ஆத்மார்த்த சீடர் ஒருவர்.
        
அம்பாளின் ஒரு அவதாரமான அண்ணன் என்ற ஒரு வெளிப்பாட்டை அனுக்கிரகம் செய்து அவ் அம்பாளின் அருளை வெளிப்படச் செய்து அதில் மகிழ்ந்து தனது கடைமை முடிந்தது என்று உணர்ந்து தன்னையும் பரம்பொருளுடன் இணைத்துக்கொண்டு மரணமிலா பெருவாழ்வு வாழும் ஒரு மகாத்மாவாகவே நாம் ஆண்டாள்புரம் சுவாமிகளை பார்க்கமுடிகின்றது.

திருவாருர்-திருத்துறைபூண்டி வழியில் நால்ரோடு நிறுத்தம் இறங்கி அங்கிருந்து சுமார் 3 கி மீ தொலைவில் உள்ளது புதூர். ஆட்டோ வசதி உள்ளது.*

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்