*🌹🌺பாப்பையா சித்தர் ஜீவ சமாதி - பொறையாறு..🌹🌺* நாகை மாவட்டம் பொறையாரில் மகான் பாப்பையா சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.இந்த இடத்தில மகான் போகர் மற்றும் கோரக்கர் ஆகியோர் பழங்காலத்தில் ( அடர்ந்த காடாக இருந்த பொழுது ) தங்கியிருந்த இடமாகும். இங்கிருந்து ஈசனை வணங்கித் தவம் இருந்ததாக தெரிய வருகிறது.நித்திய பூஜை செய்ய ஏதுவாக " சொர்ணமகாகாளி " எனும் தெய்வத்தை பிரதிஷ்டைச் செய்து பூஜை செய்து வந்ததாக தெரியவருகிறது.மேலும் இந்த அம்ம்மையாருக்கு " பௌத்தராணி " மற்றும் "பௌத்தபூரணி " என்ற சிறப்பு பெயரும் உண்டு. பௌத்தபூரணியை வழிபட்டு வந்ததற்கு அடையாளமாக இங்கு ஒரு புத்தர் சிலை நிறுவப் பட்டுள்ளது.மேலும் மகான் கோரக்கர் சித்தரும் போகரும் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள சிவன் மற்றும் அம்பாள் சன்னதியில் அமர்ந்து சில நூல்களை எழுத முகாந்திரம் இட்டதாக தெரிகிறது.இங்கிருந்து மகான் கோரக்கர் சித்தர் ககண மார்கமாக திரிகோணமலை சென்று வந்ததாக அறியப் படுகிறது. ...