தர்ம யுகம்
கால கணக்குகள்;
கிருத யுகம்
************
அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21
அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும்,
சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்
**************
நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக
14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்
***************
சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்
**********
நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்
யுகங்களின் கால அளவுகள்
******************************
கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள்
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். 14 மன்வந்திரங்கைளக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
கல்பங்கள்
************
வாமதேவ கல்பம்
ஸ்வேத வராக கல்பம்
நீல லோகித கல்பம்
ரந்தர கல்பம்
ரெளரவ கல்பம்
தேவ கல்பம்
விரக கிருஷ்ண கல்பம்
கந்தற்ப கல்பம்
சத்திய கல்பம்
ஈசான கல்பம்
தமம் கல்பம்
சாரஸ்வத கல்பம்
உதான கல்பம்
காருட கல்பம்
கெளரம கல்பம்
நரசிம்ம கல்பம்
சமான கல்பம்
ஆக்நேய கல்பம்
சோம கல்பம்
மானவ கல்பம்
தத்புருஷ கல்பம்
வைகுண்ட கல்பம்
லெச்சுமி கல்பம்
சாவித்ரி கல்பம்
கோர கல்பம்
வராஹ கல்பம்
வைராஜ கல்பம்
கெளரி கல்பம்
மகோத்வர கல்பம்
பிதிா் கல்பம்
தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.
மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும்.
நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள்.
ஆனால்
தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள்.
1 மனித வருடம் = 1 தேவ நாள்.
360 மனித வருடம் = 1 தேவ வருடம்.
இப்போது தேவர்களின் கால கணக்கை துவங்குவோம்.....
12000 தேவ வருடம் = 1 சதுர்யுகம் (43,20,000 மனித ஆண்டுகள்).
1 சதுர்யுகம் என்பது 4 யுகங்களை கொண்டது. அதாவது 12000 தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.
கிருத யுகம் 17,28,000 மனித வருடம் / 4800 தேவ வருடம்.
திரேதாயுகம் 12,96,000 மனித வருடம் / 3600 தேவ வருடம்.
துவாபரயுகம் 8,64,000 மனித வருடம் / 2400 தேவ வருடம்.
கலியுகம் 4,32,000 மனித வருடம் / 1200 தேவ வருடம்.
அதாவது ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித ஆண்டுகள் அல்லது 12,000 தேவ வருடங்கள். சதுர்யுகத்தை மஹாயுகம் என்றும் அழைப்பர்.
71 மகாயுகங்கள் = 1 மனுவந்தரம்.
மொத்தம் 14 மனுவந்திரங்கள் உள்ளன அவை :
1.சுவயம்பு
2.சுவாரோசிஷம்
3.உத்தமம்
4.தாமசம்
5.ரைவதம்
6.சாக்சூசம்
7.வைவசுவதம்
8.சாவர்ணி
9.தக்ச சாவர்ணி
10.பிரம்ம சாவர்ணி
11.தர்ம சாவர்ணி
12.ருத்திர சாவர்ணி
13.ரௌசிய தேவ சாவர்ணி
14.இந்திர சாவர்ணி
இப்போது நாம் இருப்பது 7 வது மனுவந்திரம்.
கல்ப காலம்:
*************
ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும்.
எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.
பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பும் நிகழ்வும் இருக்காது.
எனவே பிரம்மனின் பகல் மட்டும்
பிரம்மனின் ஒரு நாள் ஆகும்.
பிரம்மனின் கல்பகாலத்தில் 14 மனுவந்திரங்கள் அடங்கும்.
அதாவது ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும்
1 மனு மற்றும் 1 இந்திரன் வீதம்,
14 மனுக்கள் மற்றும் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்
(இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).
2 மனுவந்திரத்திர்க்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. ஸந்தியா காலத்தின் அளவு நான்கு கலியுகம் அளவு.
அதாவது,
432000 X 4 = 1728000 மனித வருடங்கள்.
இதேபோல் 14 மனுவந்திரத்திர்க்கு பின்பு மீண்டும் ஒரு பெரிய இடைவேளை இருக்கும்.
அதுவே பிரம்மனின் இரவு
எனவே பிரம்மனின் ஒரு பகலில், 71 X 14 மகாயுகங்களும்,15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மனுவந்தரங்கள் = 71 x 14
மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 = 2,59,20,000 மனித ஆண்டுகள்.
2,59,20,000 = 6 மஹாயுகங்கள்.
( 43,20,000 X 6 = 2,59,20,000).
ஆக பிரம்மனின் 1 பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும் கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இவ்வாறு 360 நாள் (அ) 360 கல்பம் (அ) 360 X 1000 சதுர்யுகம் என்பது பிரம்மனின் ஒரு வருடம்.
பிரம்மனின் 100 வருடம் = ஒரு பிரம்மனின் ஆயுள்.
அதாவது பிரம்மனின் ஆயுள் என்பது 155,520,000,000,000 மனித வருடங்கள்.
அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும்
ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார்.
தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,972,944,456 வருடங்கள்.
பிரம்மாவிற்கு இப்போது 51 வயது நடந்து கொண்டிருக்கிறது.
பிரம்மாவின் ஆயுள் 100 என்றால்,
அதன் பின் பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அழியும் என்றால் இன்னும் ஜீவராசிகள் உயிர்வாழ 49 பிரம்மா ஆண்டுகள் பாக்கியுள்ளன.
அதாவது 76,20,48,00,000,000 வருடங்கள் இன்னும் பாக்கியுள்ளது.
இது போலவே யுகங்கள் மாறி கொண்டே இருக்கும்
தற்போது கலியுகம் நடந்து கொண்டு இருக்கின்றது.
கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
Comments
Post a Comment