ரமண மகரிஷியும் ....
மகான் ரமண மகரிஷி
தன்னை தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான் என்று வேதம் சொல்கிறது ...
ஒருமுறை ரமண மகரிஷியை ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு தயாராகி இருந்தது.
ரமணரின் அருளுரை முடிந்து உணவு வேளை வந்தது. ஒரே கூட்டம். எல்லாம்போக பிச்சைக்காரர்கள் வேறு கூட்டமாக உணவருந்த வந்துவிட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு பெரிய தர்ம சங்கடமாகிவிட்டது.
பிச்சைக்காரர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று மைக்கில் Announcement செய்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.
மிகவும் சிரமப்பட்டு பிச்சைக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ரமணமகரிஷிக்கு உணவு பரிமாறிவிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.
இறுதியில் *ரமணமகரிஷி பிச்சைக்காரர்களுடன் வரிசையில் அமர்ந்திருந்தார்.*
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
ரமண மகரிஷி சொன்னார் , " *நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான்.* இறைவனிடம் பிச்சை கேட்கிறோம். சிலர் தீர்க்க ஆயுள் வேண்டுமென்பார்.ஒரு சிலர் சம்பத்துக்கள் வேண்டுமென்பர். ஒரு சிலர் புத்திர பாக்கியம் வேண்டுவர். ஒரு சிலர் நிம்மதி வேண்டுவர். அதனால் நானும் பிச்சைக்காரனே " என்றார்.
நிகழ்ச்சிக்கு அழைத்தவர் தனது தவறை உணர்ந்து அனைவருக்கும் ஒரே பந்தி போட்டு பரிமாறினார். விழா இனிதே முடிந்தது.
*தன்னை தாழ்த்திக்கொண்டவன் இறைவனுக்கு ஒப்பானவன்.*
Comments
Post a Comment