சித்தர்கள் பகுதியில் பாப்பையா சித்தர்
*🌹🌺பாப்பையா சித்தர் ஜீவ சமாதி - பொறையாறு..🌹🌺*
நாகை மாவட்டம் பொறையாரில் மகான் பாப்பையா சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.இந்த இடத்தில மகான் போகர் மற்றும் கோரக்கர் ஆகியோர் பழங்காலத்தில் ( அடர்ந்த காடாக இருந்த பொழுது ) தங்கியிருந்த இடமாகும்.
இங்கிருந்து ஈசனை வணங்கித் தவம் இருந்ததாக தெரிய வருகிறது.நித்திய பூஜை செய்ய ஏதுவாக " சொர்ணமகாகாளி " எனும் தெய்வத்தை பிரதிஷ்டைச் செய்து பூஜை செய்து வந்ததாக தெரியவருகிறது.மேலும் இந்த அம்ம்மையாருக்கு " பௌத்தராணி " மற்றும் "பௌத்தபூரணி " என்ற சிறப்பு பெயரும் உண்டு.
பௌத்தபூரணியை வழிபட்டு வந்ததற்கு அடையாளமாக இங்கு ஒரு புத்தர் சிலை நிறுவப் பட்டுள்ளது.மேலும் மகான் கோரக்கர் சித்தரும் போகரும் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள சிவன் மற்றும் அம்பாள் சன்னதியில் அமர்ந்து சில நூல்களை எழுத முகாந்திரம் இட்டதாக தெரிகிறது.இங்கிருந்து மகான் கோரக்கர் சித்தர் ககண மார்கமாக திரிகோணமலை சென்று வந்ததாக
அறியப் படுகிறது.
மகான் கோரக்கர் சித்தரும் போகரும் இங்கிருந்து சதுரகிரி புறப்படும் முன் அங்கிருந்த சாதுக்களிடம் இந்த இடத்திற்கு முஸ்லிம் இனத்தைச் சார்ந்த சித்தர் ஒருவர் வருவார் என்றும் அவர் பெயர் பாப்பையா என்றும் அவர் இவ்விடத்தில் அமர்ந்து மக்களுக்கு பல நன்மைககள் செய்வார் என்றும் அவரை இங்கயே ஜீவ சமாதி வைக்கும் படியும் அதன் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றும் மகான் கோரக்கர் சித்தர் கூறிச் சென்றதாகப் பல செவி வழிச் செய்திகள் உள்ளன.
மகான் கோரக்கர் சித்தரின் கட்டளைப் படி தற்பொழுது அந்த இடத்தில் பாப்பையா சித்தருக்கு ஜீவ சமாதி அமைக்கப் பட்டு ஒரு அற்புதமான ஆலயமாக உள்ளது.இங்கு மக்கள் குருவாரம் ,அஷ்டமதிதி ,அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அன்னதானத்துடன் கூடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.அத்துடன் இங்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் மதியம் அன்னதானம் வழங்கப் படுகின்றது.மேலும் இங்கு நடைபெறும் பூஜைகளில் முஸ்லிம் இன மக்களும் கலந்துக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகான் கோரக்கர் சித்தர் இவ்விடத்தில் தங்கி இருந்த போது இங்கிருந்த தழுதாச் செடி இன்று ஒரு பெரிய மரமாகக் காட்சியளிகின்றது.தற்பொழுது தழுதா மரமும் மாவுலிங்கமரமும் இவ்விடத்தின் தல விருட்சமாகக் கருதப் படுகின்றது.
மகான் கோரக்கர் சித்தர் இவ்விடத்தில் தங்கி இருந்தமையால் எதிர்வரும் காலத்தில் இந்த இடம் மக்கள் கூட்டம் நிறைந்த குறை தீர்க்கும் ஸ்தலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.மகான் கோரக்கர், போகர் மற்றும் பாப்பையா சித்தர் ஆகிய மூன்று மகான்கள் அருள் நிறைந்த இவ்விடத்திற்கு நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்
பௌத்தபூரணியை வழிபட்டு வந்ததற்கு அடையாளமாக இங்கு ஒரு புத்தர் சிலை நிறுவப் பட்டுள்ளது.அதனருகில் மூர்த்தி கோரக்கர் அதன் தத்துவத்தை விளக்குகிறார்.அனைத்து இடத்திலும் புத்தர் சிலை அமர்ந்த நிலையிலேயே காணப்படும்.ஆனால் இந்த இடத்தில உள்ள புத்தர் சிலை நின்ற நிலையிலும் அதன் மேலே ஓர் நாகம் உள்ளது இது குண்டலினி சக்தியின் சின்னமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
Comments
Post a Comment