சித்தர்கள் பகுதியில் சிவசத்குரு சுவாமிகள்
*🌹🌺சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமிகள் - திருக்கச்சூர்..🌹🌺*
சுவாமிகள்” சேக்கிழார் பிறந்த தொண்டை நாட்டில் படப்பை என்னும் ஊரில் நெசவு தொழில் செய்யும் குடும்பத்தில் அவதரித்தாரார். இளமையில் குலத்தொழிலை செய்து வாழ்ந்துவந்திருக்கிறார். இளவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் ஞானத்தை தேடி காசிக்கு சென்று அங்கு பாம்பன் ஸ்வாமிகள் தங்கி இருந்த மடத்தில் தங்கி இருந்து தொண்டாற்றினார்..
”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”களின் தத்துவமும் பக்தியும், தொண்டும் பெருமானை ஈர்க்கவே கனவில் காட்சி கொடுத்து நீ தெற்கு திசையில் உள்ள திருகச்சூருக்கு சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் அம்மை அப்பனுக்கு தொண்டு செய்து அருள் பெறுவாய் என கூற.. அங்கிருந்து..மதுரை வந்து திருஞானசம்பந்தர் மடத்தில் தங்கி இருந்து பிறகு சிதம்பரம் சென்று அங்கிருந்து படப்பை வழியாக திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசித்து திருக்கழுகுன்றம் வந்து வேதகிரீஸ்வரரை வணங்கிவிட்டு திருக்கசூரை வந்து சேர்ந்திருக்கிறார்.
பின்னர் தாழக்கோவிலில் தரிசனம் செய்து ஒத்தையடி பாதைவழியே மலைகோவிலை அடைந்தபோது தாயார் காட்சி அளித்திருக்கிறார். தாயாரை தரிசித்து விட்டு நவாப் காலத்தில் கட்டப்பட்ட கோபுரம் இல்லாத நுழைவாயில் வழியாக சென்று சுவாமியையும் அம்பாளையும் தரிசித்து வெளியே வரும்போது அவர் பார்வை மங்கி இருள் ஆனதாம். பிறகு ஆலயத்தினுள் செனற உடன் பார்வை தெரிந்ததாம். உடனே அங்கேயே தங்கி இருந்து முட்புதர்களை லாம் சீர் செய்து கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் செய்து வந்ததிருக்கிறார்கள்..
இவர் இரும்பை பொன்னாக்கி அதன் மூலம் கும்பாபிஷேகம் நடத்தினாரார் என்று அங்கு மக்கள் கூறுகின்றனர்..
”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”கள் அங்கே இருந்த அரசமரத்தை காட்டி இந்த மரத்தில் கிழக்கு நோக்கி ஒரு கிளை வரும். எப்போ அந்த கிளை வாடுதோ அப்போ என் விதி முடியும் என்றாராம். அதேபோல் அவர் பிச்சை எடுத்த அன்னத்தை சிவன் முன் வைத்து சிவனோடு கலந்து விட்டாராம். பின்பு கிழக்கு நோக்கிய நிலையில் அவரை பிரதிஷ்டை செய்து சாமாதி எழுப்பினார்களாம். வருடம் தோறும் அவர் சமாதியான நாளை குருபூஜை செய்து கொண்டாடி வருகின்றார்களாம்.
சுவாமிகளின் சமாதியை தரிசித்து விட்டு வெளியே வரும்போது அவருடைய சீடர் மௌன குரு வீராசாமிகள் ஜீவ சமாதி காணபடுகிறது. அவர்தான் குழந்தைவேல் சுவாமிகளின் வாழ்க்கை சரிதத்தை தொகுத்து எழுதினாராம் .அதில் நிறைய தகவல்கள் காணபடுகின்றன. சித்தர் பீடத்தில் அவை கிடைகின்றன.
ஜீவ சமாதி வழாகத்தில் நல்ல பசுமையான காட்சியோடு சாய்பாபா சிறிய உருவமாக இயற்கை சூழலில் அருள் புரிகிறார்.
இந்த சித்தர் பீடத்தில் அன்னதானமும் ஒவ்வரு பொர்ணமி அன்றும் வழங்க படுகிறது நாமும் அதற்கு நம்மால் ஆனா உதவிகளை அளிக்கலாம் விருப்பம் உள்ள பக்தர்கள் "அருள்மிகு மருந்தீஸ்வரர் தியாகராஜர் திருக்கோவில் இறைபணி சபை" குழந்தைவேல் சுவாமி வீரா சுவாமி மடம்,74,மலைக்கோவில் தெரு ,திருகச்சூர்
தலையாய சித்தராம் அகத்தியர் பற்றிய ஒரு கேள்விக்கு தங்களிடம் பதில் வேண்டுகிறேன்.
ReplyDeleteதமிழில் கேள்விகள் கேட்டு பதிலிறுக்கும் TamilKB.com தளத்தில் இருந்து வருகிறேன். இத்தளம் பலவகைப்பட்ட கேள்விகளை கேட்டு தமிழிலே பதில் தரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இங்கு தங்கள் வருகையை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய ஜிமெயில் கணக்கைக் கொண்டே இயக்க இயலும், தங்களின் வலை முகவரி, தங்களுடைய துறை வல்லுமை இவைகளையும் பதிவு செய்து கொள்ளலாம். இணையத்தில் தமிழில் ஒரு அறிவுக் கருவூலம் படைக்க ஆசை. ஆன்மிகத்தில் ஏற்கனவே ஒரு கருவூலம் படைத்த உங்கள் உதவியை வேண்டுகிறேன், உதவுவீர்களா?
கேள்வியின் முகவரி இதோ:
https://tamilkb.com/question/is-agastyar-guru-muni-or-kuru-muni/
தங்கள் ஆன்மிகப் பணிக்கு என் வணக்கங்கள்.