மாயம்மா தொடர் கட்டுரை பகுதி 1
மாயம்மா.....!- பகுதி 1
***********************
1970 வரையிலும் மாயம்மா குறித்து எவரும் அறிந்திருக்கவில்லை.
கன்னியாக்குமரி கடலில் குளித்துகொண்டு,பாறைகளின்மேல் படுத்துறங்கும் ஒரு மனநிலை பாதித்த பெண்ணாகவே நினைத்து அவரை கடந்து சென்றவர்தான் அதிகம்.
வாவுத்துறை மீனவ கிராமத்திற்குள் சென்று அங்கிருக்கும் மீனவ பெண்மனிகளுக்கு உதவி செய்வதும், அவர்களுக்கு மாவு இடித்து கொடுப்பதுமான சிறு வேலைகள் செய்துகொடுப்பதும், பதிலுக்கு எந்த உதவியும் எதிர்பார்க்காமல் நடையை கட்டுவார். அப்படியும் அவர் கையில் ஏதாவது உணவை திணித்தாலும், அதை உண்ணாமல் வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் நாய்களுக்கு அதை போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்.
நாள் கணக்கில் உணவு உட்கொள்ளாமலேயே பாறைமீது கடும் வெயிலில் அமர்ந்திருப்பார். கடற்கரையில் சங்குவிற்கும் வியாபாரிகள் கூட மாயம்மாவை ஒரு பைத்தியக்காரி என்றுதான் நினைத்திருந்தார்கள்.
இந் நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அது....??
(தொடரும்....!)
Comments
Post a Comment