மாயம்மா தொடர் கட்டுரை பகுதி 3

மாயம்மா.....!! பகுதி-3
***********************

தன் சித்து விளையாட்டுக்களை மக்களுக்கு உணர்த்த ஆரம்பித்துவிட்டார் மாயம்மா......!!

கடற்கரை சாலையில் பேருந்தில் அடிபட்டு குடல்சரிந்து வீழ்ந்த நாயை தன் மடியில் வைத்து அதன் வயிற்றில் வைக்கோலால் தையல் இட்டு துணியால் கட்டியபடி அதனை மாயம்மா தடவி கொடுக்க........,

சுற்றிலும் வியாபாரிகளும்,சுற்றுலா பயணிகளும் நின்று ஏளனத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த பொழுதில்........

கிட்டத்தட்ட உயிரை மாய்த்துக்கொண்டிருந்த அந்த நாய் திடீரென உடலை சிலிர்ப்பியது....... லேசான உருமலோடு மாயம்மாவின் மடியில்கிடந்த நாய் தலையை தூக்கி பின் எழுந்து நின்றது.

சுற்றிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் வாயடைத்து போனார்கள். இது எதையுமே சட்டைசெய்து கொள்ளாத மாயம்மா வந்தவழியே திருப்பி நடக்க ஆரம்பித்தாள். மாயம்மாவின் பின்னால் அவளால் உயிர்பிழைத்த நாயும்......,

நாட்கள் செல்ல....செல்ல.... மாயம்மாவை பற்றிய பேச்சுக்கள் கன்னியாக்குமரியில் அதிகரித்தது.... கூடவே மாயம்மாவை சுற்றியுள்ள  நாய்களின் எண்ணிக்கையும்தான்.....! ஆம்.... மாயம்மாவால் உயிர்பிழைத்த நாய் மாயம்மாவை விட்டு விலகவே இல்லை. இப்போது மாயம்மாவை சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள்.

மாயம்மா நடக்கும்போது தன் பரிவாரங்களோடுதான் நடந்து செல்வாள்.உறங்கும் போதும் அத்தனை நாய்களும் அவளை சுற்றியே உறங்கும். அவள் விழித்த மறுகணமே அத்தனை நாய்களும் விழித்துக்கொள்ளும்.

மாயம்மாவிற்கு பசி எடுப்பதில்லை. அப்படி பசித்தால் தன் பரிவாரங்களுடன் சன்னதி தெருவை நோக்கி நடையை கட்டுவாள். அங்கு வரிசையாக மீனாட்சி பவன், லட்சுமி பவண், ஆனந்த் பவன் என உணவு விடுதிகள் இருக்கும். அவளுக்கு பிடித்தமான உணவு விடுதிக்குள் நுழைந்து கொள்வார். கூடவே குட்டியும்,பெரிதுமான நாய்கள் கூட்டமும் உள்ளே நுழையும்.

வடையோ, திண்பண்டமோ கையில் கிடைப்பதை எடுத்து சிறுது பிய்த்து தான் மென்றுவிட்டு மிச்சத்தை எல்லா நாய்களுக்கும் பகிர்ந்தளிப்பார். கடை உரிமையாளர் கைகட்டி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
மற்ற கடைகாரர்கள் இவரை பொறாமையோடு பார்ப்பார்கள்.காரணம்........?

மாயம்மா புகுந்த கடையில் அன்று வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. காலப்போக்கில் ஆள் ஆளுக்கு ஒரு உணவு பொட்டலத்தோடு மாயம்மாவை தேடி செல்ல துவங்கிவிட்டனர். அனேகமாக அந்த பொட்டலங்களை மாயம்மா ஏற்றுக்கொள்வதில்லை. அதை அப்படியே தன்னை சுற்றி இருக்கும் நாய்களுக்கு போட்டுவிடுவார். சில நேரங்களில் மாயம்மா சிறிது உண்டுவிட்டு மிச்சம் வைக்கும் உணவை பிரசாதம் பெற்றுக்கொண்ட பக்தனாய் மகிழ்வோடு வாங்கி செல்வார்கள்.மிச்ச உணவில் மாயம்மாவின் ஆசி கிடைப்பதாய் நம்பினார்கள்..........,

மாயம்மா குறித்து நான் தேட ஆரம்பித்ததும் பலரின் அனுபவ பகிர்வு என்னை ஆச்சர்ய படுத்தினாலும் அதன் உண்மை தன்மையை பரிசோதிக்க விரும்பினேன். நானே எதிர்பார்க்காத பெரும் ஆச்சர்யம் ஒன்று எனக்காக காத்திருந்தது............!!

தொடரும்

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்