மாயம்மா தொடர் கட்டுரை பகுதி 2

மாயம்மா.........!- பகுதி 2
**************************

இந்த பாறைகள்தான் மாயம்மாவின் இருப்பிடம்...!!

பலமணி நேரங்கள் இந்த கடலில் காய்ந்த சருகாய் நீராடுவார். பின்னர் ஓர் கந்தை துணிபோல பாறைகளின் மேல் துயில் கொள்வார். இந்த பகுதியில் கடல் அலையின் ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும். உள்ளூர் வாசிகளே இந்த பகுதியில் கடலில் இறங்க தயங்குவார்கள். பாறைகள் நிறைந்த இடம். ஆனாலும் இந்த ஆக்ரோஷ அலைகள் மாயம்மாவை எப்போதும் தாலாட்டிவிட்டுதான் செல்லும்.

கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கு இங்கிருந்தே நேர்கோட்டில் பல பாறைகள் கடலுக்குள் மூழ்கி இருக்கிறது. அந்த பாறைகளை மிதித்து மேலேறி நடப்பாரோ...? அல்லது நீந்தி சென்று சேருவாரோ யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் காலை சூரிய உதயத்தில் கடற்கரையில் நீராடி கொண்டிருப்பவர், அஸ்தமனத்தில் விவேகானந்தர் பாறையின் மீது தோன்றி ஆச்சர்யப்படுத்துவார்.

ஆரம்பகாலத்தில் கடற்கரையில் உலாவும் நண்டுகளை பிடித்து தீமூட்டு சுட்டுதின்று பசியாற்றி கொள்வார். காலப்போக்கில் அதனையையும் கைவிட்டு ஒரு யோகியை போல உணவோ நீரோ அருந்தாமல் காலம் கடத்தினார்.

இவரை ஒரு பைத்தியக்கார கிழவி என்று பாவித்துவந்த மக்களுக்கு தான் யார் என்று உணர்த்திய ஒரு சம்பவத்தை நிகழ்த்தி காட்டினார் மாயம்மா.....!!

பல ஆண்டுகளுக்கு முன் கன்னியாக்குமரிக்கு சுற்றுலா வந்த பேருந்து ஒன்று சாலையில் சுற்றித்திரிந்த ஒரு நாயின்மீது மோதிவிட்டது. குடல் சரிந்த நிலையில் அந்த நாய் மூர்ச்சையாகிவிட்டது.

அங்கிருந்த தள்ளுவண்டி வியாபாரிகள் முகம் சுழித்து ஒதுங்கி நின்றார்கள். அந்நேரம் எங்கிருந்தோ வந்த மாயம்மா அந்த நாயை அள்ளி தன் மடியில் போட்டுகொண்டு சரிந்த குடலை எடுத்து அதன் வயிற்றுக்குள் திணித்து ஒரு கடினமான வைக்கோலால் தையல்போட்டார்கள். தன் கந்தையான மேல்சீலையை கிழித்து நாயின் வயிற்றை சுற்றி ஒரு கட்டு போட்டுவிட்டு நாயை தடவிகொடுத்தபடி இருக்க......

இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தள்ளுவண்டி வியாபாரிக்கள்..... செத்த நாய்க்கு வைத்தியம் பார்க்குதே இந்த பைத்தியம் என்று பரிகாசிக்க......

யாருமே சற்றும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று அங்கே அரங்கேறியது....... கண்ணுற்ற மக்கள் வாயடைத்துப்போய் வெலவெலத்து போய்விட்டார்கள்........! அப்படி அங்கு என்னத்தான் நடந்தது.......???

(தொடரும்........!)

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்