ஓம் ஶ்ரீ கசவான மௌன ஜோதி நிர்வாண சுவாமிகள்

*🌹🌺 ஓம்  ஸ்ரீ கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமிகள்🌹🌺*

எத்தனையோ மகான்களின் திருவடி பட்ட தேச மண்ணில் தினம் தினம் நாம் நடந்து கொண்டிருக்கின்றோம். ஆம்! இந்தியத் திருநாட்டில் மலைகளில் மட்டும் மகான்களின் வசிக்கவில்லை. மனிதர்களோடு மனிதர்களாக நடமாடி, மகத்துவம் புரிந்தவர்கள். இல்லறவாசிகளுக்கு நல்லறம் அருளினார்கள். எத்தனையோ பேரின் துக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.சாபங்களை சுவீகரித்துக் கொண்டார்கள். வரங்களை வழங்கினார்கள். ஆக மொத்தத்தில், மகான்களின் திரு அவதாரங்கள் எல்லாமே இந்த மண்ணை செழிப்பாக்க வந்தவை;

மனிதர்களை நெறிப்படி வாழ வைக்க வந்தவை.அதுபோல் வந்த ஒரு புனித ஆத்மாதான்-கசவனம்பட்டி ஸ்ரீஜோதி மவுன நிர்வாண சுவாமிகள். இவரது காலத்தில் தமிழகத்தில் இருந்த மகான்கள், தங்களைச் சந்திக்க வரும் பக்தர்களைக் கசவனம்பட்டிக்குத் திருப்பி விட்டார்கள். மனிதர்களில்தான் மற்றவர்களை அறிவதற்கு சந்தர்ப்பம் தேவை. ஒரு மகான், மற்றொரு மகானை அறிவதற்கு சந்தர்ப்பம் தேவை இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஞான திருஷ்டியால் உணர்ந்தார்கள். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் தான் ஒரு அலை என்றால், கசவனம்பட்டி சுவாமிகள் ஒரு கடல் என்றார். தன்னைச் சந்திக்க வந்த பக்தர்களிடம். திருக்கோவிலுர் தபோவனத்தில் தன்னாட்சி நடத்தி வரும் ஞானாந்தகிரி சுவாமிகள், கசவனம்பட்டி சுவாமிகள் ஒரு ஆன்மிக ஜோதி என்று ஆரூடம் சொன்னார். பொள்ளாச்சியில் புரவிபாளையம் ஜமீன் பங்களாவில் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டே முப்பது வருடங்களுக்கும் மேலாக முன்வினைகளை அறுத்த கோடி சுவாமிகள். மகான்களுக்கெல்லாம் மகான் என்று கசவனம்பட்டி சுவாமிகளுக்குப் புகழாரம் சூட்டினார். இதெல்லாம் ஒரு சின்ன முன்னுரைதான்.

திண்டுக்கலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவு. பழநி-மதுரை சாலையில் உள்ள கன்னிவாடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு. திண்டுக்கல் -பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கசவனம்பட்டி இருக்கிறது. கசவனம்பட்டி என்பது ஒரு சிறு கிராமம். ஆனால் ஸ்ரீஜோதி மவுன நிர்வாண சுவாமிகளால், இந்தக் கிராமம் பலருக்கும் தெரிந்திருக்கிறது. தனது துறவு வாழ்க்கைக்குக் கசவனம்பட்டியைத் தேர்ந்தெடுத்து இங்கே வந்து அமர்ந்து அருளாட்சி நடத்தினர் மவுன நிர்வாண சுவாமிகள்.

எந்த ஒரு துவக்கத்துக்கும் முடிவு உண்டல்லவா? அந்த முடிவு கசவணம்பட்டி சுவாமிகளுக்கு 22.10.1982 அன்று ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் அதிகாலை வேளையில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார் சுவாமிகள். ஆனால், மறுநாள் தன்னை சமாதியில் வைக்கும் வரை தன் உடலில் இருந்த ஆன்ம ஒளியைஉடலில் இருந்து பிரித்து விடாமல் பிரகாசமாகவே இருந்தார் சுவாமிகள். சமாதி நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வானம் மழையைப் பொழிவித்துக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. கருடன் மூன்று முறை வட்டமிட்டு வலம் வந்தது. சுவாமிகளுக்காக அமைக்கப்பட்ட திருக்கோயிலில் அவரது திருவுடல் முறையாக சமாதி ஆனது. சுவாமிகளின் உடல் கிழே இறக்கப்பட்டு , விதம் விதமான அபிஷேகங்கள் நடந்தன. கற்பூரம், விபூதி, சந்தனம், பன்னீர், ஜவ்வாது போன்றவை மணம் பரப்ப... ஒரு மகானின் திருவுடலுக்கு முடிவு வந்தது.

இறப்பு என்பது மகான்களைப் பொறுத்தவரை உடலுக்கு மட்டும்தான், ஆன்மாவுக்கு அல்ல. இன்றைக்கும் தன் இருப்பிடம் தேடி வரும் பக்தர்களுக்கு அருளி, ஆசி வழங்கி வருகிறார் கசவனம்பட்டி சுவாமிகள். பலிபீடம், நந்தி ஆகியவை, சமாதியின் முகப்பில் காணப்படுகின்றன. உள்ளே-சுவாமிகளின் இரு உலோகத் திருமேனிகள் அவர் எப்படி அமர்ந்திருப்பாரோ. அதே நிலையிலேயே தரிசனம் தருகின்றன. சுவாமிகள் சமாதி கொண்ட இடத்தின் மேலே ஒரு லிங்கத் திருமேனி. ராஜகோபுரம், விசாலமான மண்டபம். கருவறை, பிராகாரம். அன்னதானக் கூடம் என்று இந்த ஆலயம் காட்சி தருகிறது. எண்ணற்ற சாதுக்களும் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் தினமும் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஐந்து கால பூஜை பௌர்ணமி, அமாவசை, கிருத்திகை, பிரதோஷம், மாதா மாதம் வரும் மூல நட்சத்திரம் போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கசவனம்பட்டி சென்று அந்த மகானின் ஆனந்த சந்நிதியைத் தரிசித்து விட்டு வருவோம்🌹🌺🌹🌺

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்