கல்லுகட்டி சித்தர்
*🌹🌺கல்லுகட்டி சித்தர் ( ஜோதி நாள் - 14-02-2010)🌹🌺*
ஆதாரங்களுடனும் நேருக்கு நேர் பார்த்த பக்திப்பரவசத்துடனும் பகிர்கிறோம்,
தான் தனது உடலின் பல்வேறு பகுதிகளில் கற்களை கட்டி வைத்திருப்பதாலும், தன்னைப்பார்க்க வரும் பக்தர்களுக்கு கற்களை கொடுத்து அவர்களின் குறைகளைப் போக்குவதாலும் இவருக்கு இந்த பெயர் வந்தது, 7 அடி உயரம் வாட்ட சாட்டமான உடல். ஓங்கார குரல். இடுப்பில் ஒரே ஓர் உடுக்கை, தலையில் தேவையான போது தலைப்பகை, இரண்டு கைகளிலும் 3 பேர் சேர்ந்து தூக்க முடியாத கல் மூட்டை, ஒரே கையில் தூக்கி தேளில் வைக்கும் போது பக்கத்தில் இருந்தால் பூமி அதிர்வதைக் காணலாம்.
சமீப காலங்களில் இவர் செங்குன்றம் காவாங்கரை பேன்ற பகுதிகளில் பித்து பிடித்தவர் போன்று சுற்றித் திரிவது வழக்கம், இது சாதாரண மக்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் ஓர் யுக்தியாக அவர் பயன்படுத்தினார், ஆகவே பலரும் அவர் அருகில் செல்ல அஞ்சுவார்கள்,
இவர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் அங்கும் இங்குமாக அலைந்து திரிவார், சில நேரங்களில் கட்டுக்கடங்காத கோவம் வந்து யாரையோ திட்டுவார், அமானுஷ்யம் இருக்குமோ என அனைவரும் அஞ்சினர்,
பின் சில நேரங்களில் செங்குன்றம் நெடுன்சாலையில் உள்ள கண்ணப்ப நாயனார் என்ற மஹானின் கோவில் சன்னதி அருகில் அமர்வதும் , கண்ணப்ப நாயனாருடன் பேசுவதும் போன்ற பல செய்கைகளும் நடந்தன.
கடவுளாக இருந்தாலும் பக்தர்களிடமிருந்து தப்ப முடியாது அல்லவா!!!, அவ்வாறே அப்பகுதியில் திருப்பதி பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்ணப்ப நாயனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கல் கண்டுபிடித்து விட்டனர் இவர் ஒரு சித்தர் என்பதை,
அன்றிலிருந்து இவரைப்பார்க்க நூற்றூக்கணக்கான பேர் குவிந்தனர். இவரைப்பற்றி ஒளிப்பதிவு செய்ய சன் தொலைக்கட்சியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரும் பதிவு செய்து ஒளிபரப்பை கேமராவிலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியாமல் போன பின்னர்தான் தெரிந்தது இவரின் சித்து விளையாட்டு….
சித்தர்கள் , சித்தர்கள் என்று 21 ஆம் நூற்றாண்டிலும் கூறிக்கொண்டு திரிகிரீர்களே என பலரும் கேலி செய்வதுண்டு, ஐயாவும் பக்தரும் சென்றால் இவர்கள் இருவரில் எவருக்கு பித்து பிடித்து இருக்கிறது என்று கேலி செய்தவர்களும் உண்டு, சில நேரகளில் கையில் இருக்கும் இரும்பு கம்பியினால் இவ்வாறு கேலி செய்தவர்களிம் தலை உடைக்கப்பட்டதும் உண்டு, ஏனென்றால் கல்லுகட்டி ஐயா என்பவர் அன்பானவர் அல்ல, மகா கோவக்காரர், அவர் எடுக்கும் முதல் வார்த்தையே தவறு செய்தவர்களை காலில் விழ வைத்துவிடும்,
நிகழ்வு 1)
ஸ்டான்லீ மருத்துவமணையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு நோயாளியை காப்பாற்ற அவரிடம் கூட்டி சென்ற போது - கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி , “செத்த பொனத்த உயிர் வர வைக்கனும்மா?? ” என வானத்துக்கும் பூமிக்குமாய் கொப்பளித்து , அவரை காப்பற்றியும் விட்டார், அவர் இன்னும் கல்லுகட்டி அய்யாவின் புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார் அவர் பெயர் : சிவக்குமார் , அலைப்பேசி எண் – 9941436366,
நிகழ்வு 2)
கேரள தேசத்தை சார்ந்த ஒரு பக்தர் தீராத நோயால் பாதிக்கப்பட்டு தன்னால் நடக்க கூட முடியாத நிலையில் , இவரது புகழை கேட்டு – இவரிடம் வந்தார், நேயாளி மிகப்பெரிய பணக்காரர், வந்து இறங்கியதே ஒரு கண்டைனர் போன்ற ஒரு ஆடம்பர வேணில் தான், இவரது வயிற்று பகுதி தாறுமாறாக பெறுத்து விட்டது மருத்துவம் சரிவரவில்லை, ஆப்பரேஷன் செய்ய்யலாம் ஆனால் உறுதி கூற முடியாது என்று சொல்ல்வே இங்கு வந்துள்ளார், நாங்கு வேலையாட்கள் கோட் ஷூட் போட்டு இவரை பல்லக்கில் தூக்கி வந்துள்ளனர், அவர்கள் வருவதை தூரத்திலிருந்தே கவனித்த அவர், கையில் இரும்பு கடப்பாரையை எடுத்துக்கொண்டு சிங்கத்தின் கர்ச்சனை கர்ஜித்துக்கொண்டு ஓடி வரிவதைப் பார்த்த அந்த கோட் ஷூட் போட்ட ஆபீசர்கள் பல்லக்கினை போட்டுவிட்டு நாலா திசைகளில் தலை தெரிக்க ஓடியிருக்கின்றனர். முதலாளி ( நோயாளி ) எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கொண்டே வணக்கம் வைக்க, கோவம் தலைக்கேறிய முனிவர் கூக்குறள் இட்டு , அவர் செய்த தவறுகளை கூறி, “பொய் ஒன்னுக்கு போய்ட்டு வான்னு மிரட்ட ஆரம்பித்தார் – எழ கூடமுடியாமல் இருந்த அவனையும் அவனுக்குள் ஏவப்பட்ட அமானுஷ்யத்தையும் போராடி அவன் – இறுதியாக ஒன்னுக்கு போக ஆரம்பித்தார். நடப்பவற்றை 200 அடி தூரத்திலிருந்து நால்வரும் – சில பக்தர்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், எங்கே அருகில் சென்றால் தன்னையும் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில், இறுதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஒரு கல்லை எடுத்து கட்ட ஆரம்பித்தார் - கோடீஸ்வரர் ஒன்றரை மணி நேரமாக சிறுநீர் கழித்து நடந்து வந்தாய், அவரது வயிர் முற்றிலும் வற்றி, தோல் மட்டும் தொடை மரைக்கும் அளவுக்கு தொங்கியது , வணக்கம் சொன்னார், “திரும்ப திட்ட ஆரம்பித்து இந்த பக்கம் உன்ன பாத்தேன் உன்ன கொன்னு போட்டுவேன், ஓடிப்போயிடு னு சொல்லி விரட்ட தள்ளாடி தள்ளாடி நடந்து சென்றாய் கேரோவேனுக்கு” இந்த சம்பவத்தை பார்த்த பக்தர்கள் கல்லுகட்டி ஐயாவின் கல்லாலயத்தில் இருக்கிறார்கள், வேண்டுமென்றால்
விசாரித்துக்கோள்ளுங்கள்,
தன் பக்தர்கள் களைப்போடு இருக்கும்போது யார்மூவமாகவோ குளிர்பாணம் வரும் பாரு என் சொல்லி - கிடைக்க செய்தல், முதல் நாள் வாங்கிய பிரியானியை இரண்டாம் நாள் அதே சூட்டுடன் அதே சுவையுடனும் எடுத்துக்கொடுத்து இருக்கிறார். சில நேரங்களில் கண்ணு கண்ணு என்று கொஞ்சும் போது பக்தர்களுக்கு இருக்கும் ஆனந்தத்திற்கும் , அன்பாக பிரியானி வாங்கி ஊட்டிவிடும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
இன்னும் இதே தமிழகத்தில் பல்வேறு சக்திகளை உள்ளடக்கி கம்ப் யூட்டர் காலத்திலும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
*இது நண்பரின் பதிவு*
Comments
Post a Comment