மாயம்மா தொடர் கட்டுரை பகுதி 4
மாயம்மா.....!- பகுதி 4
***********************
கிருஷ்ணா.... இதுதான் நீங்கள் படத்தில் காணும் நாயின் பெயர்.
நான் மாயம்மா குறித்த தகவல்களை திரட்ட மாயம்மா சமாஜத்திற்கு சென்றபோது என் அருகில் வந்து பவ்யமாய் நின்று கொண்டது.
நான் அங்கிருந்த பூஜாரி புஷ்பராஜன் அவர்களிடம் "அய்யா இந்த நாய் முதுகில் பெரிய தழும்பு இருக்கிறதே இது என்னங்கய்யா" என்றேன். அது ஒரு ஆச்சர்யமான கதைப்பா என ஆரம்பித்தார்....
ஐந்து வருடங்களுக்குமுன் ஒருநாள்......
சாலையில் வேகமாக சென்ற பைக் ஒன்று இந்த நாயின்மீது மோதி இதன் மேல் கவிழ்ந்து விட்டது. பைக்கில் இருந்த சைலன்சர் இதன் முதுகில் பட்டு முதுகு பாகம் அப்படியே வெந்து போயிற்று. நாய் சத்தமிட்டபடியே எங்கும் செல்லாமல் நேராக மாயம்மா கோவிலுக்குள் ஓடி வந்து மாயம்மாவிற்கு பூஜை செய்யும் படத்திற்குமுன் வந்து படுத்து கொண்டது.
பூசாரி புஷ்பராஜன் நாயின் நிலையை பார்த்து பதறி விட்டார். இந்த நாய் ஏன் ஓடிவந்து மாயம்மாவின் காலடிகளில் வந்து படுத்துவிட்டது என்று புரியாமல் அப்படியே நின்றிருக்க ......, அவர் மனதிற்குள் ஓர் குரல் ஒலிக்கிறது.....
இந்த நாயின் காயத்தில் தட்டத்தில் இருக்கும் திருநீற்றையும், பூவையும் வைத்து கட்டு என்று.
அதன்படியே அந்த நாயின் காயத்தில் திருநீற்றையும்,பூவையும் வைத்து கட்டு போட...., அங்கேயே அமைதியாக படுத்து தூங்கி விட்டதாம் அந்த நாய்.
புஷ்பராஜனும் பூஜைகளை முடித்துவிட்டு கோவில் கதவுகளை சாத்திவிட்டு அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.
விடிந்தும் விடியாமலும் காலை நேரத்தின் கதவின் வெளியே ஒரு குரல்கேட்க ..... எழுந்து சென்று கதவை திறந்தவருக்கு அங்கு வெள்ளை சட்டை அணிந்த ஒரு நபர் நின்று கொண்டிருப்பதை கண்டார்.
அவர் வெறித்த பார்வையோடு... இங்கு ஒரு நாய் காயத்தோடு வந்ததா..? என கேட்க. , பூஜாரியும் ஆமாங்கய்யா அதோ படுத்திருக்கு... நீங்க யார்? உங்களுக்கு யார் சொன்னது என கேட்க.....
இவர் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாதவவராக விடுவிடு வென்று உள்ளே சென்று தன் பையில் இருந்து ஒரு ஊசியை எடுத்து அதன் உடலில் செலுத்திவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பி சென்று காணாமலேயே போய்விட்டார்.
பூஜாரிக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. நாய் நன்றாக எழுந்துநின்று கோவிலை ஒரு சுற்றுசுற்றி வந்தது. பூஜைக்கு வேறு நேரமாகி விட்டதே என்று மாயம்மா முன் நின்று தீபாதரணை காட்டி மணியடித்து பூஜை செய்ய துவங்கினார் பூஜாரி.........
அப்போதுதான் மெய்சிலிர்க்க வைக்கும் அந்த அதிசயம் அங்கே அரங்கேறியது.......!!
Comments
Post a Comment